குகணேசபுர காணிகளை ஆடாவடித்தனம் செய்து பலாத்காரமாக கையகப்படுத்த முயற்சி
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்திற்குற்பட்ட புணாணை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் குகணேசபுர கிராமத்தில் காணி காணிகளை அடாவடித்தனம் செய்து பலாத்காரமாக கையகப்படுத்த முற்படுவதாக செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வ.சுரேந்தர் (V. Surender) தெரிவித்துள்ளார்.
பரம்பரை பரம்பரையாக ஆண்டு வந்த தமிழர்களின் காணிகளை ஓட்டமாவடியில் உள்ள
முஸ்லிம் நபர்களால் தமிழர்களின் ஒப்பம் உறுதியுள்ள ஏ11 கொழும்பு பிரதான
பாதையின் அருகாமையில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்திற்குற்பட்ட
புணாணை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் உள்ள குகணேசபுர காணிகளை ஆடாவடித்தனம்
செய்து பலாத்காரமாக கையகப்படுத்த முற்படுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த விடயம் சம்மந்தமாக கிராம சேவகரும் சென்று சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், மேலதிக நடவடிக்கைகள் சம்மந்தமாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரன், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் ஆகியோருடன்; தொலைபேசியூடாக அறிவித்துள்ளதாகவும், செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வ.சுரேந்தர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



