குடு சலிந்தவின் சர்வதேச சிவப்பு பிடியாணை விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
வெளிநாட்டில் வசிக்கும் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான குடு சலிந்து என்ற சலிந்து மல்ஷிதா தாக்கல் செய்த ரிட் மனு மீண்டும் ஜனவரி 30 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன்னை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு அறிவித்தல் விடுப்பதை தடுக்கு உத்தரவிடக்கோரி தற்போது வெளிநாட்டில் உள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரான குடு சலிந்து என்ற சலிந்து மல்ஷித குணரத்ன சட்டத்தரணி ஊடாக ரிட் மனுiவ தாக்கல் செய்திருந்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் இன்று (07) இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனு மீதான பரிசீலனை திகதி அறிவிப்பு
சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சொலிசிட்டர் ஜெனரல் ஷனில் குலரத்ன, மனுவின் பராமரிப்பு குறித்து பூர்வாங்க ஆட்சேபனைகளை எழுப்ப எதிர்பார்ப்பதாக கூறினார்.
இதனையடுத்து மனுதாரரின் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் மனுவின் உண்மைகளை உறுதிப்படுத்த திகதியைக் கோரியுள்ளார்.

அதன்படி, மனுவை ஜனவரி 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் குடு சலிந்து, தனது வழக்கறிஞர் மூலம் இந்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.