குடு ரொஷானின் மனைவிக்கு ஆயுள் தண்டனை!
போதைப்பொருளை மறைத்து வைத்து விற்பனை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட பெண் பிரதிவாதி, கடத்தல்காரரான 'குடு ரொஷானின்' மனைவிக்கு ஆயுள்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மூன்று பிள்ளைகளின் தாயான 36 வயதுடைய விஜேசிங்க ஆராச்சிலாகே நிரோஷா என்ற பெண்ணுக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு
இந்த பெண், மட்டக்குளி பகுதியில், 25 கிராமுக்கு அதிகளவான ஹெராயின் போதைப்பொருளை மறைத்து வைத்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.
2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பொலிஸார் நடத்திய சோதனையின் போது பிரதிவாதியான பெண்ணிடமிருந்து இந்த போதைப்பொருள் தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் பின்னர் அரசு பகுப்பாய்வாளரிடம் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதுடன் அங்கு 3.58 கிராம் நிகர அளவு போதைப்பொருள் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தீர்ப்பு
இதன் பின்னர், ஹெராயின் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
விசாரணைக்கு பின்னர், பிரதிவாதிக்கு எதிராக அரசுத் தரப்பு சுமத்திய குற்றச்சாட்டுகள் நியாயமாக சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் தீர்ப்பை அறிவித்த நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே கூறியுள்ளார்.
அதன்படி, பிரதிவாதிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

தங்கமயிலுக்கு கிடைத்த வேலை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப மானம் போகப்போகுது! அடுத்த வார ப்ரோமோ Cineulagam

SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri
