நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமலுக்கு மீண்டும் சிறை!
புதிய இணைப்பு
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு டிசம்பர் 01 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை டிசம்பர் 01 அன்று சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20) இலஞ்ச ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபரான நாமல் ராஜபக்சவை அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறும் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கிரிஷ் வழக்கின் மற்றுமொரு சந்தேகநபரான ஜானகி சிறிவர்தனவிற்கும் டிசம்பர் 01 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.
கிரிஷ் வழக்கு தொடர்பான, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
இடைக்கால தடை உத்தரவு
இந்த வழக்கில் முன்னிலைபடுத்துவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.
கிரிஷ் கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிற்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவை நடைமுறைப்படுத்துவதை தடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை நேற்று முன் தினம் (18) பிறப்பித்திருந்தது.
சந்தேகநபரான நாமல் ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தால் கடந்த நவம்பர் 3ஆம் திகதி வழங்கப்பட்ட பிணை உத்தரவு குறைபாடுகளுடனானது என தெரிவித்து இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோதே இந்த உத்தரவை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் மிஷ்கின் என்னை தவறாக தொட்டாரா?... சர்ச்சைக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் Cineulagam