தமிழர் பகுதி ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்ற மஹோற்சவ திருவிழாக்கள்(Photos)
மன்னார் - நாட்டான் பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹோற்சவத்தின் 11ஆம் நாள் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
மஞ்சரதத் திருவிழா
15 நாட்கள் நடைபெறும் மஹோற்சவத் திருவிழாவில், நேற்றைய தினம் மஞ்சரதத் திருவிழா நடைபெற்றது.
இத்திருவிழாவிற்கு பதினைந்து இலட்சம் பெறுமதியான மஞ்சரதத்தினை ஆலயத்திற்கு இலவசமாக வடிவமைத்து கொடுத்த மூன்று ஆசாரியார்களை மதிப்பளிக்கும் நிகழ்வும் நேற்றைய தினம்(27.08.2023) நடைபெற்றது.
இந்த மஞ்சரதத் திருவிழாவில் 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு திருவழாவை சிறப்பித்திருந்தார்கள்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயம்
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் தேர்த் திருவிழா இன்று திங்கட்கிழமை(28.08.2023) இடம்பெற்றது.
துர்க்கா புஷ்கரணி தீர்த்தக் கேணியில் துர்க்கை அம்பாளின் தீர்த்தோற்சவம் மற்றும் கொடியிறக்க உற்சவமும் நடைப்பெறும்.
தேர்த் திருவிழாவுக்கான கிரியைகள் அதிகாலை ஆரம்பமாகி காலை 7.30 மணியளவில் வசந்தமண்டப பூசை ஆரம்பமானது.
வசந்தமண்டப பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து துர்க்கையம்மன் சித்திரத் தேரில் எழுந்தருளினார்.
இதன்போது பலரும் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் பொருட்டு விசேட வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதேவேளை நாளை (29.08.2023) துர்க்கா புஷ்கரணி தீர்த்தக்கேணியில் காலை துர்க்கை அம்பாளின் தீர்த்தோற்சவமும், மாலை கொடியிறக்க உற்சவமும் நடைபெறவுள்ளது.
செய்தி-தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |