மொட்டு கட்சியின் முக்கியஸ்தரின் அநாகரிக செயல்: பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் டென்சில் பத்மசிறி, அநாகரிக செயல் புரிந்த குற்றச்சாட்டில் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவம் நேற்றையதினம் (27.07.2023) இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் உள்ள முன்னணி பெண்கள் பாடசாலை ஒன்றின் அதிபர் மற்றும் பெற்றோர்கள் குழுவிற்கு தனது அந்தரங்க உறுப்புகளை காட்டி கேலி செய்த குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக மாநகரசபையின் மற்றுமொரு முன்னாள் உறுப்பினர் சமந்த பீரிஸ் என்பவர் வட்ஸ்அப் குழு மூலம் தகாத இடுகைகளைப் பகிர்ந்து அதிபரை துன்புறுத்துவதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அதிபர் மற்றும் பெற்றோரின் முறைப்பாடு
இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தினர்.
இதன்போது சமந்தா பீரிஸ், டென்சில் பத்மசிறியுடன் காவல் நிலையத்திற்கு சென்றிருந்தார்.
எவ்வாறாயினும், நிலையத்தை விட்டு வெளியேறும் போது வெலிக்கடை காவல்துறை சிற்றுண்டிச்சாலைக்கு வெளியே வைத்து, மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் டென்சில் பத்மசிறி தமது அந்தரங்க உறுப்புக்களை காட்டியதாக கூறி அதிபரும் பெற்றோரும் மீண்டும் முறைப்பாட்டை செய்தனர்.
இதனையடுத்து நேற்று (27.07.2023) சட்டத்தரணி ஊடாக வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து டென்சில் பத்மசிறி கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
