மக்கள் ஆதரவை இழந்து கடும் நெருக்கடியில் ராஜபக்சர்கள்! (VIDEO)
ஆட்சி அமைத்து மிக குறுகிய காலப்பகுதியிலேயே மக்கள் ஆதரவை இழந்து கடும் நெருக்கடிகளை ராஜபக்சர்கள் எதிர்கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக ஆட்சிப்பீடம் ஏறிய கோட்டாபய ராஜபக்ச மீதான நம்பிக்கை சிங்கள மக்கள் மத்தியில் சற்று தளர்ந்துள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இதனடிப்படையில் தான் இலங்கையின் தற்போதைய அரசியல் பொறிமுறையில் மாற்றம் தேவை எனும் கருத்தும் எழுந்துள்ளது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது நிஜக்கண் விசேட செய்தி தொகுப்பு,
குறிப்பாக கோட்டாபய அரசாங்கம் ஒரு தோற்றுப்போன அரசாங்கம் எனவும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களும் தோற்று விட்டார்கள் எனவும் எதிர்க்கட்சிகளும் கடுமையாக சாடி வருகின்றன.
மூன்றில் இரண்டு தனிச்சிங்கள பெரும்பான்மையோடு கிட்டத்தட்ட 60 இலட்சம் வாக்குகளால் வெற்றி பெற்றதாக கூறிக்கொள்ளும் ஓர் அரசாங்கம் தற்போது தோற்றுப்போன அரசாங்கமாக மாறிவிட்டது.
மூன்றிலிரண்டு பெரும்பான்மையை வழங்கிய சிங்கள மக்கள் இப்பொழுது ஆத்திரத்தோடும்,விரக்தியோடும் காணப்படுகின்றார்கள் என்பதுவே நிதர்சனம்.
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam