அடிப்படை சம்பளத்தை உயர்த்தக்கோரி கொத்மலை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்
5000 ரூபாய் சம்பளம் உயர்த்த கோரி கொத்மலை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் பணிபகீஸ்கரிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது, நேற்று (10) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொத்மலை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் அடிப்படை சம்பளத்தில் 5000 ரூபாய் உயர்த்தக்கோரி தொழிற்சாலை முன்பாக பணிபகீஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
முன்வைத்த கோரிக்கை
குறித்த ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் அனைவரும் கடந்த புதன்கிழமையில் இருந்து தொழிற்சாலை நிர்வாகத்திற்கு சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை கோரி வந்த நிலையில் எவ்வித பதிலும் வழங்காத காரணத்தினால் இன்றைய தினம் அனைத்து ஊழியர்களும் காலை முதல் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு இன்றும் உரிய தீர்வு கிடைக்க வில்லை எனவும் தொழிற்சாலை நிர்வாக ஊழியர்களும் உறுப்பினர்களும் நேற்று தொழிற்சாலைக்கு சமூகம் தரவில்லையென கொத்மலை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |