டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்
கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி ஷிரான் தரப்பினரின் உத்தரவின் பேரில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், 42 வயதான கனகரத்தினம் சந்திரகுமார் என்பவரும் அவரது தாயான 72 வயது பெண்ணும் காயமடைந்தனர்.
இந்நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பூகுடு கண்ணாவின் சீடர்
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் இந்தியாவில் தங்கியுள்ள மோதர பூகுடு கண்ணாவின் சீடர் என்பதும் தெரியவந்துள்ளது.
அவர் தனது தாயுடன் வீட்டின் முன் நின்றுக் கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்திரகுமார், ஒரு கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
