அமைச்சர் சரோஜினி போல்ராஜின் கருத்துக்கள் கர்வமானவை..! குற்றம் சுமத்தும் ஆசிரியர் சங்கம்
கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் நல அமைச்சர் சரோஜினி போல்ராஜ் தெரிவித்த கருத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் கருத்துக்கள் கர்வமானவை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆசிரியர் ஒருவரால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்பட்டு, உயிர் மாய்த்து கொண்ட 10ஆம் வகுப்பு மாணவியின் பெற்றோர் இன்னும் தன்னைச் சந்திக்கவோ அல்லது மனு அளிக்கவோ இல்லை என்று அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
முறையான முறைப்பாடு
அத்துடன், தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு ஆணையகத்திடம் தனது வேண்டுகோள் இருந்த போதிலும், முறையான முறைப்பாடு அளிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சிறுமி இறந்துவிட்ட நிலையில், இந்த அமைச்சர், தம்மை மாணவியின் பெற்றோர் சந்திக்க வரவில்லை என்று சொல்வதில் தமது ஆவணத்தை காட்டியுள்ளார்.
இந்த சம்பவத்தில் முறைப்பாட்டை முதலில் செய்திருக்க வேண்டியவர் பாடசாலை அதிபராகவே இருந்திருக்க வேண்டும். எனினும் அவர் பிரச்சினையை மறைக்க முயன்றுள்ளார். ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த விடயத்தில், அரசியல் தலையீடு குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த ஸ்டாலின், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்கள் ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சியுடன் தொடர்பு கொண்டதாகக் கூறப்பட்டாலும், விசாரணை, அரசியல் செல்வாக்கு இல்லாமல் தொடரும் என்று தொழிற்சங்கத்திற்கு உத்தரவாதம் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |