சுற்றிவளைக்கப்பட்ட எரிவாயு லொறி: கொட்டகலையில் அமைதியின்மை (Video)
எரிவாயு வழங்கக் கோரி ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று இன்றைய தினம் நடத்தப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கொட்டகலை பிரதேச மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
எரிவாயு கொள்கலன்கலை வீதியில் வைத்து நுவரெலியா பகுதிக்கு எரிவாயு எடுத்துச் சென்ற லொறியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
லொறியை சுற்றி வளைத்த ஆர்ப்பாட்டகாரர்கள் தமக்கு எரிவாயு விரைவில் விநியோகிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கோசங்களை எழுப்பிய நிலையில் அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து திம்புள்ள - பத்தனை பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து எரிவாயு விநியோக லொறியில் இருந்து 60 எரிவாயு சிலிண்டர்களை மாத்திரம் இறக்கி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளனர்.
சுமார் 2 மணித்தியாலங்களுக்கும் அதிகநேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால் நுவரெலியா - ஹட்டன் வீதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.











வல்லரசுகளின் மோதல்களுக்கு மத்தியில் இந்து சமுத்திரத்தைப் பாதுகாக்க இணக்கப்பாடு: புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சு
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
போரின் தொடக்கத்தை அறிவித்த அதே தொப்பியுடன்.. உயிரிழந்த 6 அமெரிக்க படை வீரர்களுக்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப்