கொட்டகலை - டிரேட்டன் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பால்குட பவனி
கொட்டகலை டிரேட்டன் கே.ஓ பிரிவு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பால்குட பவனி நேற்று (23) மிகக் கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.
பெண்கள் கற்பூரச்சட்டி ,பாற்குடம் எடுக்க நாட்டின் பல பாகங்களின் மிகவும் சிறப்புமிக்க கலைக்கலாசார அம்சங்களுடன் இந்த பால்குடபவனி நடைபெற்றுள்ளது.
இதன்போது பல பரவசமூட்டும் பறவைக்காவடிகள் எம்நாட்டுக்கே உரித்தான பாரம்பரிய மற்றும் நவீன மேளத்தாள இசைமுறைகள் , சிங்கள கலாசார நடன நிகழ்வுகள், யானைகள் அணிவகுப்பு, கரகம் , காவடி , பறவைக்காவடி கரகம் , காவடிகள் , கோலாட்டம் உட்பட பல்வேறு அம்சங்கள் மிகச்சிறப்பாக இடம்பெற்றள்ளது.
பால்குடபவனி
குறித்த பால்குடபவனி டிரேட்டன் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சபையினரும் டிரேட்டன் நற்பனி மன்றமும் அனைத்து பிரிவினரினதும் ஒத்துழைப்பினை பெற்று மிகச்சிறப்பாக ஒழுங்கப்பட்டுள்ளது.
இந்த பால்குடபவனி கணபதி வழிபாடு, புண்ணயவாஜனம், கணபதி ஓமம், நவக்கிரக ஓமம், லக்ஸ்மி ஓமம் இடம்பெற்று நற்பணிமன்றத்தினால் லொக்கில் பாற்பண்ணை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து பால்குட பவனி ஆரம்பமாகியுள்ளது.
அத்துடன் பால்குடபவனியைத் தொடர்ந்து முத்துமாரியம்மனுக்கு பாலாபிசேகம் இடம்பெற்று தீ மிதிப்பு வைபவம் இடம்பெறவுள்ளது.
மேலும் இன்றைய தினம் மகேஸ்வர பூஜையுடன் அடியார்களுக்கு அன்னதாகம் வழங்கப்பட்டு மாலை 4.00 மணியளவில் விசேட வசந்தமண்டப பூஜை இடம்பெற்று வேத பாராயணமும் திராவிட தோத்திரமும் பாடப்பட்டு மங்கள வாத்தியங்கள் இசைமுழங்க பக்தர்கள் புடைசூழ அலங்கரிக்கப்பட்ட வர்ணத்தேரில் தேர்ப்பவனி இடம்பெறுமென ஆலய பரிபால சபையினர் தெரிவித்துள்ளது.