கொட்டகலையில் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியொன்று தீக்கிரை
கொட்டகலை - பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆகில் தோட்டத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்று(09.01.2026) காலை ஏற்பட்டுள்ள நிலையில், விபத்தில் வீடு ஒன்று முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
அத்துடன், அருகில் இருந்த இரண்டு வீடுகள், பகுதியளவில் சேதமடைந்த நிலையில், ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் அங்கிருந்தவர்கள் போராடி தீயை அணைத்துள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணை
இந்த சம்பவம் குறித்து, திம்புள்ள பத்தனை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைக்க முயற்சி செய்த போதிலும் ஒரு வீடு முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, வீட்டில் இருந்த பல பெறுமதிமிக்க வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும், இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் நிர்க்கதியான நிலைக்குள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும், தீ விபத்து தொடர்பில் உயிர்சேதங்கள், காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan