நீர் விளையாட்டை படம் பிடிக்க முயற்சித்து பலியான கொரிய பிரஜை
தான் நீர் விளையாட்டில் ஈடுபடும் விதத்தை டிஜிட்டல் கெமராவில் பதிவு செய்ய முயற்சித்த கொரிய பிரஜை ஒருவர், வாத்துவை நீச்சல் தடாகத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தென் கொரியாவை சேர்ந்த கிம் மிக்சங்

தென் கொரியாவை சேர்ந்த 43 வயதான கிம் மிக்சங் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வாத்துவையில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றுக்கு வந்திருந்த அவர், இன்று காலை நீச்சல் தடாகத்தில் விழுந்து கிடப்பதை மின் ஊழியர் ஒருவர் பார்த்து அது குறித்து அறிவித்ததை அடுத்து விசாரணைகளை ஆரம்பித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீச்சல் தடாகத்தின் கரையின் மீது ட்ரை போர்ட் ஒன்றை வைத்து, அதில் இருபுறமும் பதிவு செய்யக்கூடிய தொழிற்நுட்ப டிஜிட்டல் கெமராவை பொருத்தி, கடல் கரையில் இருந்து நீச்சல் தடாகத்திற்குள் குதித்துள்ளார்.
கெமராவில் பதிவான காட்சி

அந்த காட்சி கெமராவில் பதிவாகியுள்ளது. நீச்சல் தடாகத்தில் சுமார் நான்கு அடி ஆழத்தில் உள்ள டையில் கல்லொன்றில் அவரது தலை பட்டிருக்கலாம் எனவும் இதன் காரணமக அவர் மரணமடைந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
அவரது தலை முடியும் அந்த இடத்தில் சிக்கி இருப்பதை காணக்கூடியதாக இருந்தது என விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நீதவான் விசாரணைகள் நடைபெறவுள்ளன.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 8 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri