வெளிநாட்டில் பல கோடி தங்க நகைகளுடன் சொகுசு வாழ்க்கை! அறிவிப்பின்றி அவசரமாக நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர்
டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக்கும்பல் உறுப்பினர் ரஞ்சித் குமார என்ற ‘கொண்ட ரஞ்சி’ தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக்குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ குற்றப்புலனாய்புத் திணைக்கள அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டார்.
'கொண்ட ரஞ்சி', இத்தாலிக்கு தப்பிச்செல்ல முயன்றபோது, ஜனவரி 09 திகதி டுபாயில் கைது செய்யப்பட்டார். இதன்போது அவரது மனைவியும் குழந்தைகளும் அந்நாட்டின் பாதுகாப்புப்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபர்
கொண்ட ரஞ்சி', முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச்செயலாளர் கொலை வழக்கில் பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபராகவும் உள்ளார்.

கோல்டன் விசா’ வசதியின் அடிப்படையில் டுபாயில் தங்கியிருந்தபோது, அவர் இலங்கையில் கொலை, மிரட்டிப்பணம் பறித்தல், மற்றும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல கடுமையான குற்றங்களை செய்துள்ளதுடன், எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்புமின்றி அவர் டுபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
இவர் டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படுவார் என்பது குறித்து அந்நாட்டின் பொலிஸ் அல்லது அரசாங்கமோ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் கூறப்படுகின்றது.
குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில், நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
டுபாயில் வசிப்பதற்காக தங்க விசா
டுபாயில் வசிப்பதற்காக தங்க விசா பெற்றிருந்ததால், கொண்டா ரஞ்சிக்கு நாட்டின் சட்டங்களிலிருந்து ஓரளவு விலக்கு கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

டுபாயில் பெரும் தொகையை முதலீடு செய்பவர்களுக்கு வழங்கப்படும் தங்க விசாக்களை, கொண்ட ரஞ்சி பல ஆண்டுகளாக பெற்று வந்துள்ளார். 4 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகளை அணிவது கொண்ட ரஞ்சியின் பழக்கமாக இருந்துள்ளது.
பத்து விரல்களிலும் மோதிரங்கள், பல கிலோ எடை கொண்ட தங்க நெக்லஸ்கள், மற்றும் மணிக்கட்டிலிருந்து முழங்கை வரை வளையல்கள் அணியும் பழக்கம் கொண்ட ரஞ்சிக்கு இருந்துள்ளது.
இவர் தனது தங்க நகைகள், ஆடம்பர வாழ்க்கை காரணமாக, பாதாள உலகக் கும்பல்களிடையே பிரபலமான நபராக இருந்துள்ளார். அவருக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களுடனும் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளதுடன், அவர் சில காலமாக இலங்கைக்குப் பல்வேறு போதைப்பொருட்களைக் கடத்தும் செயலில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் கூறுகிறது.
இதற்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட அவரை 72 மணி நேரம் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரின் செயலாளர் கொலை! வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர் சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு