கொழும்பை உலுக்கிய கோர விபத்து! மனதை உருக்கும் காட்சிகள்(Video)
இன்றைய பொழுது கொழும்பில் வசிப்பவர்களுக்கு மிகவும் சோகமான பொழுதாக மாறியிருக்கின்றது.
கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் அரச பேருந்தொன்று மீது மரம் ஒன்று விழுந்ததில் ஐவர் உயிரிழந்ததோடு, பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலைக்கு விரையும் உறவுகள்..
இவர்களுள் பாடசாலை மாணவர்களும் உள்ளடக்கம்.
அவர்களை மீட்கும் பணிகள் துரித கதியில் இடம்பெற்றதோடு பலர் காப்பாற்றப்பட்டனர். அதேசமயம் மூவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், படுகாயமடைந்தவர்களின் உறவுகளும், உயிரிழந்தவர்களின் உறவினர்களும் வைத்தியசாலையை நோக்கி தற்சமயம் வந்து கொண்டிருக்கின்றனர்.
இவர்களுள், பேலியகொடையை சேர்ந்த 65 வயதுடைய ஒருவர் தன் தொழிலுக்காக மொரட்டுவை செல்வதற்காக விபத்துக்குள்ளான குறித்த பேருந்தில் சென்றுள்ளார். அவர் உயிரிழந்ததை அடுத்து அவருடைய மகள் மற்றும் மனைவி வைத்தியசாலைக்கு கதறி அழும் காட்சிகள் கமராக்களில் பதிவாகியிருந்தன.
அதேசமயம் மேலும் சிலர் தங்களது உறவுகளைத் தேடி கண்ணீருடன் வைத்தியசாலையில் காத்திருக்கும் காட்சிகள் மனதை உருக்குவதாய் அமைந்திருக்கின்றன.
காலையில் தொழிலுக்குச் சென்றவர்கள், பாடசாலைக்குச் சென்றவர்கள் என பலர் இந்த கோர விபத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.
அதேசமயம், பேருந்தின் மீது மரம் முறிந்து விழுந்துள்ள நிலையில், பேருந்துக்குள் சிக்குண்டிருந்தவர்கள் தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
சிசிடிவி காணொளி