கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் பரவும் தவறான தகவல்! வெடித்தது புதிய சர்ச்சை
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வின் போது வெடிகுண்டுகள் மற்றும் தோட்டாக்கள் கண்டெடுக்கப்படவில்லை என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ உறுதிப்படுத்தியுள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் கடந்த 8 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போது சில வெடிகுண்டுகள் மற்றும் தோட்டாக்கள் (துப்பாக்கி ரவைகள்) கண்டெடுக்கப்பட்டதாக இரு சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
பொய்யான தகவல்
இந்நிலையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் இயங்கிவரும் Factseeker இச்செய்திகளின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவவிடம் Factseeker வினவியபோது, அவர் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வின்போது வெடிகுண்டுகளோ, வெடிமருந்துகளோ அல்லது துப்பாக்கி ரவைகளோ கண்டுபிடிக்கப்படவில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
அதுமாத்திரமன்றி இந்த அகழ்வு பணிகள் கடந்த 6 ஆம் திகதி மாத்திரமே முன்னெடுக்கப்பட்டதாகவும், 8 ஆம் திகதி எந்தவொரு அகழ்வும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அகழ்வு பணி
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் தண்ணீர் குழாய்களை பொருத்துவதற்காக கடந்த மாதம் 29 ஆம் திகதி நிலத்தை தோண்டிய போது மனித எச்சங்கள் மற்றும் ஆடைகள் என்பன தென்பட்டதையடுத்து, அப்பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
இதனைத்தொடர்ந்து கடந்த 30 ஆம் திகதியன்று அவ்விடத்தைப் பார்வையிட்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிவான், அங்கு ஜுலை மாதம் (இம்மாதம்) 6 ஆம் திகதியன்று அகழ்வுப்பணிகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டார்.
இதன்படி கடந்த 6ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது சுமார் 13 மனித எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
You may like this video

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
