கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய நிர்வாகத்தின் முன்மாதிரியான செயற்பாடு
இந்த வருடம் ஆலயங்களின் வெளிவீதியில் அமைக்கப்படும் கடைகளுக்கு முற்றுமுழுதாக ஏலம் அற்றதாக, கட்டுபாட்டு விலையுடன் வியாபாரிகளுக்கு கடைகளை பகிர்ந்தளிக்கவுள்ளதாக கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றிஸ்வரர் ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவிழா காலங்களில் ஆலய வளாகத்தில் கடைகள் அமைப்பதற்கான நிலத்தினை போட்டி போட்டு,பெருந்தொகை நிதியினை கொடுத்து வாடகைக்கு எடுத்துக்கொள்கின்றனர்.
ஆலயங்களின் வெளிவீதியில் அமைக்கப்படும் கடைகள்
இதன்பின்னர் ஆலயத்திற்கு வரும் பக்தர்களிடம் அதிகமான விலைகளுக்கு பொருட்களை விற்பனை செய்கின்றனர்.
இவ்வாறு ஆலய தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் அசௌகரியங்களை தடுக்கும் நோக்கில் இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றிஸ்வரர் ஆலய நிர்வாகத்தின் செயற்பாட்டை பாராட்டி,பலரும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏல விற்பனை
இந்த நடைமுறையை ஏனைய ஆலய நிர்வாக சபைகளும் முன்னெடுத்து சென்றால் ஆலய வழிபாட்டுக்கு வரும் பக்தர்கள் மனநிறைவோடு ஆலய தரிசனத்தை மேற்கொண்டு வீடுசெல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கிலங்கை ஆலயங்களுக்கு முன்மாதிரியான செயற்பாட்டை செய்த மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய நிர்வாகம், வியாபாரிகளுக்கும் பக்தர்களுக்கும் பெரும் உபகாரத்தை செய்து ஏனைய ஆலயங்களுக்கு முன்மாதிரியான செயற்பாட்டை மேற்கொண்டுள்ளது வரவேற்கத்தக்க செயலாகும் எனவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam