பிரான்ஸில் கொலைவெறி தாக்குதல்: பொலிஸ் அதிகாரி படுகொலை
பிரான்ஸில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தை ஒன்றில் நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதல் இன்றையதினம்(22.02.2025) பிற்பகல் பிரான்ஸ் - ஜேர்மனி எல்லையில் அமைந்துள்ள கிழக்கு நகரமான மல்ஹவுஸில் உள்ள ஒரு சந்தையில் நடத்தப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின் போது, குறித்த நபர் 37 வயதான அல்ஜீரிய நாட்டவர் எனத் தெரியவந்துள்ளது.
நால்வர் காயம்
இவர், பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் இருந்தவர் என்பதுடன் நாடுகடத்தலை எதிர்கொண்டு வந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
வீட்டுக் காவல் தொடர்பான நீதித்துறை கட்டுப்பாட்டுப் படிவத்தில் கையெழுத்திட பொலிஸ் நிலையத்திற்கு குறித்த நபர் சென்றுள்ளார்.
இதனையடுத்து, திடீரென அவர் கையெழுத்திட மறுத்ததோடு மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
தாக்குதலில், ஒரு பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டதோடு நால்வர் காயமடைந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |