கொல்கத்தாவின் சுழலில் சிக்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி! ஹாட்ரிக் வெற்றி
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிப்பெற்றுள்ளது.
நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 45-வது லீக் போட்டி ஐதராபாத்தில் இன்று நடைபெற்றது.
இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற ஐதராபாத் அணி கேப்டன் பெட் கம்மின்ஸ் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
அதன்படி, ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட் அரை சதம் கடந்து 61 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 42 ஓட்டங்களில் வெளியேறினார்.
மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், ஐதராபாத் அணி 19 ஓவரில் 165 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
கொல்கத்தா சார்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும், சுனில் நரேன் 2ம் கார்த்திக் தியாகி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
பின்னர் 166 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களம் இறங்கியது.
தொடக்க வீரர் பின் ஆலன் 13 பந்தில் 29 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ரகானே உடன் ரகுவன்ஷி ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. ரகுவன்ஷி 39 பந்தில் அரைசதம் அடித்தார்.

15-வது ஓவரின் கடைசி பந்தில் ரகானே 43 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கடைசி 5 ஓவரில் 33 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டது.
17-வது ஓவரை ஷிவாங் குமார் வீசினார். இந்த ஓவரில் ரகுவன்ஷி ஆட்டமிழந்தார். அவர் 59 ஓட்டங்கள் சேர்த்தார்.
கடைசி 3 ஓவரில் 13 ஓட்டங்ககள் தேவைப்பட்டது. இறுதியாக 18.2 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது.
You May Like This..
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam