கிண்ணியா - சமாவாஜதீவு கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது!
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமாவாஜதீவு கிராம சேவகர் பிரிவில் நேற்று (28) அதிகாலை இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில், இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா -6, சமாவாஜதீவு பகுதியைச் சேர்ந்த, முகைதீன்வாவா கலீமுள்ளா (வயது 26), அப்துல் அஜீஸ் அஸீம்(வயது 19) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை குற்றத்தை இருவரும் இருவரும் ஒப்புக் கொண்டிருப்பதாகவும், இன்றைய தினம் ( நவம்பர் 29) சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கிண்ணியா - சமாவாஜதீவு பிரதேசத்தைச் சேர்ந்த, 28 வயதான சு. பர்சாத் என்பவர், நவம்பர் 28ஆம் திகதி, அவரது வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும்போது வாளால் வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri