கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்து: - மூவருக்கு பிணை
கிண்ணியா - குறிஞ்சாக்கேணி மிதகு படகு கவிழ்ந்ததில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் ஐந்து இலட்சம் ரூபாய் சரீர பிணையில் இருவரின் கையொப்பத்துடன் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று (16) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 23ஆம் திகதி கிண்ணியா - குறிஞ்சாக்கேணி படகு கவிழ்ந்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
இந்தநிலையில் குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் கிண்ணியா பொலிஸார் பாதுகாப்பு இல்லாத நிலையில் படகினை செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதைவேளை குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 20ம் திகதி
திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதிவான் கட்டளையிட்டார்.





தலைவனா அவன், முட்டாள்... தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சித்த பிரபல இயக்குனர் Cineulagam
