கிண்ணியா வைத்தியசாலை தொடர்பில் நளிந்த ஜெயதிஸ்ஸவிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
கிண்ணியா தள வைத்தியசாலைக்கு குழந்தை நல வைத்தியர் ஒருவரை நியமித்துத் தரும்படி கடிதம் ஊடாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்கள் பகிர்ந்தளிப்பின் போது கிண்ணியா தள வைத்தியசாலைக்கு நியமிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த குழந்தை நல வைத்தியர் அவர்கள் திடீரென வேறொரு வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
கிண்ணியா தள வைத்தியசாலை
பல வருடங்களாக கிண்ணியா வைத்தியசாலைக்கு குழந்தைநல வைத்தியர் ஒருவர் நியமிக்கப்படாதுள்ள நிலை காணப்படுகின்றது.

இதன் காரணமாக இப்பிரதேசத்திலுள்ள நோயாளிகளும், பெற்றோர்களும் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் சம்பந்தமாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் விளக்கியுள்ளார்.
இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் அவர்கள், இந்த விடயம் சம்பந்தமாக ஆராய்ந்து பார்ப்பதாகவும், கிண்ணியா வைத்தியசாலைக்கு குழந்தைநல வைத்தியர் ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.