குறிஞ்சாக்கேணி பாலத்தை விட மோசமான நிலையில் கிண்ணியா வைத்தியசாலை

Batticaloa Hospital Kinniya Imran Mahroof
By Independent Writer Dec 05, 2021 07:23 AM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report

கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பாலத்தை விட மோசமான நிலைப்பாட்டிலேயே கிண்ணியா வைத்தியசாலை உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

குறிஞ்சாக்கேணி பாலத்தை விட மோசமான நிலைப்பாட்டிலேயே கிண்ணியா வைத்தியசாலை உள்ளது. கிண்ணியா வைத்தியசாலையை ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் உபயோகிக்கின்றனர்.

இங்கு ஒரு நாளில் 550 வெளி நோயாளர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.100 பேர் அனுமதிக்கப்படுகின்றனர். மாதம் 160 பிரசவங்கள் நிகழ்கிறன.

திருகோணமலை வைத்தியசாலைகளிலுள்ள வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெரும் நோயாளர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது (2015 தரவுகளுக்கமைய )

• திருகோணமலை வைத்தியசாலையில் 134301 நோயாளிகளும்

• தரம் A யிலுள்ள கந்தளாய் வைத்தியசாலையில் 129627 நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர்.

ஆனால் • கிண்ணியா வைத்தியசாலையில் 159043 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இதன் மூலம் மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள வைத்தியசாலையை விட கிண்ணியா வைத்தியசாலையில் அதிக நோயாளர்கள் சிகிச்சை பெறுகின்றனர் என்பது தெளிவாகிறது.

ஆனால் இந்த வைத்தியசாலையின் ஆளணி மற்றும் பௌதீக வளங்களை எடுத்து நோக்கினால் தள வைத்தியசாலைக்குரிய வசதிகளும் இங்கில்லை. இங்கு 317 ஆளணியின் தேவை இருந்தும் 211 பேரே கடமையாற்றுகின்றனர்.

இங்கு சத்திர சிகிச்சை நிபுணர் இன்மையால் கடந்த 4 மாதங்களாக சத்திரசிகிசிச்சை எதுவும் நடைபெறவில்லை.நோயாளிகள் சிறிய சத்திர சிகிச்சைக்கும் திருகோணமலை வைத்தியசாலைக்கே அனுப்பப்படுகின்றனர்.

பிரசவ வாட்டில் கட்டிலை இருவர் பயன்படுத்தும் நிலையும் தரையில் கர்ப்பிணி ,பாலூட்டும் தாய்மார் உரங்கும் நிலையும் காணப்படுகிறது.

சுனாமியால் முற்றாக அழிக்கப்பட்ட பின் இந்த வைத்தியசாலை இத்தாலி அரசின் நிதி உதவி மூலம் 10 வருட கால உத்தரவாதத்துடன் நிர்மாணிக்கப்பட்டு 17 வருடங்கள் சென்ற பின்பும் இந்த வைத்தியசாலை எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் பிரதேச வைத்தியசாலையை விட மோசமான நிலையில் இயங்கி வருகிறது. திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை வைத்தியசாலையிலும் கந்தளாய் வைத்தியசாலையிலுமே ICU கட்டில்கள் காணப்படுகின்றன.

அதில் திருகோணமலை வைத்தியசாலையில் 6 ICU கட்டில்கள் மட்டுமே உள்ளன.கந்தளாய் வைத்தியசாலையில் 3 ICU கட்டில்கள் மட்டுமே உள்ளன நான்கு இலட்சம் மக்கள் வாழும் மாவட்டத்தில் ICU கட்டில்கள் போதுமானதா திருகோணமலையில் எந்த வைத்தியசாலையிலும் விசேட பிரிவுகள் இல்லை.

இதனால் சிறுநீரக ,இருதய மற்றும் புற்றுநோயாளிகள் மட்டக்களப்பு ,அனுராதபுரம் போன்ற வைத்தியசாலைகளுக்கே சிகிச்சைகளுக்காகச் செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது.

இதனால்,

• பதவிசிரிபுராவில் சிறுநீரக பிரிவும்

• கிண்ணியா மற்றும் மூதூர் வைத்தியசாலைகளில் இருதய நோய் பிரிவும்

• திருகோணமலையில் கண் நோய் பிரிவும்

• கந்தளாயில் புற்று நோய் பிரிவும் அமைக்கப்படல் வேண்டும். அத்துடன் கிண்ணியா மூதூர் வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல வருடகாலமாக முன்வைக்கப்படுகிறது.

அவ்வாறு இந்த வைத்தியசாலைகள் மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்டால் இங்குள்ள பிரச்சினைகள் பலவற்றுக்குத் தீர்வு கிடைக்கும்.ஆகவே இது தொடர்பாகவும் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்.

அத்துடன் தோப்பூர் ,ஈச்சளம்பெற்று ,புல்மோட்டை, பதவிசிறிபுர , கோமரங்கடவல வைத்தியசாலைகளும் தரமுயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களால் முன்வைக்கப்படுகிறது. இதையும் அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US