கிண்ணியா படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு காத்தான்குடியில் அனுதாபம்
கிண்ணியா - குறுஞ்சாக்கேணி படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் காத்தான்குடியில் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளதுடன் அனுதாபம் தெரிவிக்கும் பதாதைகளும் தொங்க விடப்பட்டுள்ளன.
காத்தான்குடி வர்த்தக சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டு பதாதைகளும் தொங்க விடப்பட்டுள்ளன.
காத்தான்குடி குட்சின் சந்தியிலும் அனுதாபம் தெரிவிக்கும் பதாதை தொங்க விடப்பட்டுள்ளது.
கிண்ணியா குறுஞ்சாங்கேணி பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த எமது உறவுகளின் துயரத்தில் நாமும் பங்கேற்பதுடன் அந்த ஷஹீதுகளுக்காக உளமாற பிராத்திக்கின்றோம்.
அல்லாஹ் அந்த ஹீதுகளை பொருந்திக் கொள்வதோடு உறவுகளை இழந்து நிற்கும் உறவுகளுக்கு உள அமைதியினை வழங்குவானாக என தொங்க விடப்பட்டுள்ள பதாதையில் எழுதப்பட்டுள்ளன.
இதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் அனுதாபம் தெரிவிக்கும் வகையில் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டு பதாதைகளும் தொங்க விடப்பட்டுள்ளன.

TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri