கிண்ணியாவில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவர் கைது
திருகோணமலை - கிண்ணியாவில் முச்சக்கர வண்டியொன்றில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை எரிபொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது 200 லீற்றர் டீசலும், 100 லீற்றர் பெட்ரோலும் சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டவர்கள் கிண்ணியா சூரங்கள் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 23 வயதுடைய இளைஞர்களாவர். அவர்களை விசாரணைகளின் பின்னர் நாளைமறுதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருளுடன் கைது
இதேவேளை, திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் இன்று (06) மாலை கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவின் திருகோணமலை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தமக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து குறித்த நபரை சோதனையிட்டபோது
அவரிடமிருந்து
03 கிரேம் 730 மில்லிகிரேம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும்
பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam