தம்பியின் கத்தி குத்துக்கு இலக்காகி அண்ணன் பலி - கிளிநொச்சியில் சம்பவம் (PHOTOS)
தம்பியின் கத்தி குத்துக்கு இலக்காகி அண்ணன் பலியான சம்பவம் கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சகோதரர்களிற்கிடையில் தொலைபேசியால் ஏற்பட்ட முரண்பாட்டினால், அண்ணனை தம்பி கத்தியால் குத்தியுள்ளார்.

குறித்த சம்பவத்தில் அண்ணன் சம்பவம் இடம்பெற்ற இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 37 வயதுடைய தருமராசா தவசீலன் எனும் 3 பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் தருமபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரான்சில் சீற்றத்தை ஏற்படுத்திய பிரித்தானிய மாணவி: இங்கிலாந்து இளைஞர்களுக்கு கிளர்ச்சி அழைப்பு News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
ரூ. 634 கோடிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... ஊழல் குறித்து சீரியல் நடிகை ஜனனி அசோக் Cineulagam
பாக்ஸ் ஆபிஸ்- ஆந்திராவில் முதல் தமிழ் திரைப்படம் செய்துள்ள சாதனை... ரஜினியின் ஜெயிலர் 2 செய்த ஆல்டைம் ரெக்கார்ட் Cineulagam