கிளிநொச்சியில் நிலவும் சீரற்ற காலநிலை : பொதுமக்கள் பாதிப்பு (Video)
கிளிநொச்சியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டாவலைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் புளியம்பொக்கனை ஆகிய பகுதிகளில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் சிலர் தமது இருப்பிடங்களை விட்டு அயலவர், உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
மேலும் தருமபுரம் மத்தியகல்லுரி, தருமபுரம் இலக்கம் 1 பாடசாலை ஆகியவற்றுக்கு இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
26 குடும்பங்கள் பாதிப்பு
இந்த அனர்த்தம் தொடர்பாக பிரதேச செயலகம் கிராமசேவையாளர் ஊடாக பாதிக்கப்பட்டவர்களிடம் விபரங்களை சேகரித்துவருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தின் வான்பாய்வதால் 26 குடும்பங்கள் வெள்ளநீரில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் குடியிருப்புக்களிற்குள்ளும் வெள்ள நீர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |