கிளிநொச்சி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக கனகாம்பிகை குளத்தின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகின்றது.
இதன் காரணமாக குளத்தினை அண்மித்துள்ள பகுதியில் வசிக்கும் மக்களை மிக அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
குறிப்பாக கனகாம்பிகை குளத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் இரத்தினபுரம் ஆனந்தபுரம் மக்கள் மிக அவதானமாக இருப்பதுடன், வெள்ளம் ஏற்படாத வகையில் அருகில் உள்ள கழிவுக்கால்வாய்களை சுத்தம் செய்து நீர் வழிந்தோட கூடிய வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, தொடர்ச்சியாக மழை பெய்யுமாக இருந்தால் கனகாம்பிகை குளம் வான்
பாய்வதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதனால் பரந்தன், உமையாள்புரம் பகுதிகளில்
வாழ்கின்ற மக்களும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 22 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
