கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு (Photos)
கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
மாலை 5 மணி நிலவரத்தின் படி செல்வா நகரில் மூன்று வீடுகளும், கிருஷ்ணாபுரத்தில் 5 வீடுகளும் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், மரம் முறிந்து விழுந்ததில் வீடு சேதமடைந்துள்ளதுடன், முச்சக்கரவண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளது.
மேலும் பிற்பகல் 3 மணியளவில் வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தகவல்களை திரட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு