காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் போராட்டம் (Video)
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று(10.12.2023) காலை 10 மணிக்கு கிளிநொச்சி ஏ-09 வீதியில் அமைந்துள்ள அவர்களது அலுவலகத்துக்கு முன்பாக ஒன்றுதிரண்டு இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரண்டாயிரம் நாட்களை கடந்த போராட்டம்
இவர்கள், காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் இறுதி யுத்தம் நிறைவடைந்த பின்னர் உறவினர்களால் கையளிக்கப்பட்ட தங்களது உறவுகளுக்கு நீதி கோரி கடந்த 2,485 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், இன்றும் தங்களது உறவுகளுக்கு நீதி கோரி இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், அரசியல் கட்சிகளின் செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |