சட்ட விரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்த கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!(Video)
சட்ட விரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்த கோரி கிளிநொச்சி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்நகர் பகுதி மக்களால் இன்றையதினம்(26.06.2023) குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரச அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து தமக்கு விரும்பியவர்களுக்கு காணிகளை வழங்கி வருவதாக குற்றஞ்சாட்டி அப்பகுதியில் வாழும் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்பாட்டமானது கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பித்து கரைச்சி பிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட செயலகம் முன்பாக சென்று நிறைவடைந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
மேலும், மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரனின் பார்வைக்காக மகஜர் ஒன்று மேலதிகஅரசாங்க அதிபர் சிறிமோகனிடம் மக்களால் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 10 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri