கிளிநொச்சி மோட்டார் சைக்கிளில் விபத்தில் ஒருவர் பலி: சாரதி தப்பி ஓட்டம்
கிளிநொச்சி - பூநகரி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி பூநகரி பகுதியில் இன்று(16-09-2023) இடம் பெற்ற குறித்த விபத்தின் போது ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
இந்நிலையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பினை சேர்ந்த இளைஞர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த இரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது விபத்தினை எதிர்கொண்டள்ளதுடன் விபத்தினை ஏற்படுத்திய வாகனம் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam
