பல லட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரப்பலகையுடன் ஒருவர் கைது
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையின் போது வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை பலகைகள் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து விசேட அதிரடிபடையினரால் நேற்று(31.07.2023) குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது வீடொன்ரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை பலகைகள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவரும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வனஜீவராசிகள் திணைக்கள தகவல்
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றையதினம் (01.08.2023) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தபடவுள்ளதுடன் தடையப்பொருட்கள் நாளை (02.08.2023) நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




