கிளிநொச்சியில் எரிபொருள் வழங்கும் பணி மூன்றாவது நாளாகவும் முன்னெடுப்பு(Photos)
கிளிநொச்சி - கரைச்சி தெற்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்புநிலையத்தில் எரிபொருள் விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எரிபொருள் விநியோக நடவடிக்கை நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது இன்று(02) விவசாயம் திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பணியாளர்கள், சுகாதார துறையினர் ஆகியோருக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை போக்குவரத்துச்சபை மற்றும் ஊடகவியலாளர்கள், மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் மற்றும் சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்களிற்கும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோக அட்டை
ஏனைய திணைக்களங்களில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் பணியாளர்களிற்கும் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் கண்காணிப்பில், அத்தியாவசிய சேவையில் ஈடுபடும்
உத்தியோகத்தர்களை அந்தந்த திணைக்களங்கள் ஊடாக அடையாளம் கண்டு,
அவர்களிற்கு வழங்கப்பட்ட விசேட எரிபொருள் விநியோக அட்டையை உறுதிப்படுத்தி கியூ.ஆர் அட்டை
முறை மூலம் எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 20 மணி நேரம் முன்
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
இது மட்டும் நடந்தால் கதையே மாறிடும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர் கதை பற்ற போட்ட பதிவு வைரல் Cineulagam
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan