கிளிநொச்சியில் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் உள்ளிட்டோர் மீது தாக்குதல்
கிளிநொச்சி (Kilinochchi) பேருந்து நிலையத்தில், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் அவரோடு சென்ற மற்றுமொருவர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தகவல் வழங்கியுள்ளார்.
இதன்படி, தாக்கப்பட்டவர்கள், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது வெளியேறியுள்ளார்.
பொலிஸாரின் நடவடிக்கை
நேற்று முன்தினம் இரவு கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த, பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் மற்றையவருடனும் மதுபோதையில் வந்த பொலிஸார் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற மேலும், ஆறு பொலிஸார் குறித்த இருவர் மீதும் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு தாக்குதலில் காயமடைந்த இவர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக தற்போது யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தை மூடி மறைக்கும் வகையில் கிளிநொச்சி பொலிஸார் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
