பூரண வளர்சிக்கு முன்னர் அறுவடையை ஆரம்பித்துள்ள கிளிநொச்சி விவசாயிகள்
கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் வயல் நிலங்கள் பாதிப்புற்ற நிலையில், விவசாயிகள் எஞ்சி இருக்கின்ற நெல்லையாவது காப்பாற்றும் நோக்குடன் அறுவடை செய்ய ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் இம்முறை 70000ற்கு மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் நெற்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் வெள்ள அனர்த்தத்தினால் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டிருந்தன.
தற்போது கபில நிறத்தத்தி மற்றும் மடிச்சுக்கட்டி நோய்த்தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வளர்ச்சியானது பூரணமாக முதிர்வடைவதற்கு முன்னதாக விவசாயிகள் அறுவடை ஆரம்பித்துள்ளனர்.
நோய்த்தாக்கம்
கடந்த போகங்களிலும் நோய்த்தாக்கம் காரணமாக விளைச்சல் குறைவடைந்த நிலையில் இம்முறையும் தாம் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த கால போகத்திலும் ஒரு ஏக்கருக்கு 5 - 8மூடைகளே அறுவடை செய்ய முடிந்ததாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri
