மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் ஸார்ப் நிறுவனத்தினால் இதுவரை பல இலட்சத்துக்கும் அதிகமான அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன.
இந் நிறுவனத்தினால் இதுவரை பத்தொன்பது இலட்சத்து எழுபத்தெட்டாயிரத்து அறுநூற்று அறுபத்தைந்து சதுரமீற்றர் பரப்பளவில் (1978665) இருந்து முப்பத்திரெண்டாயிரத்து எழுநூற்று தொன்னூற்றிரண்டு (32792) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸார்ப் நிறுவனம் இன்று (13) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்ட்டுள்ளது.
அவ் அறிக்கையில் இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2022 மார்ச் மாதம் இன்று வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும்,
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள சுதந்திரபுரம் பகுதியிலும், கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை மற்றும் ஆனையிறவிலும் பத்தொன்பது இலட்சத்து எழுபத்தெட்டாயிரத்து அறுநூற்று அறுபத்தைந்து சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து முப்பத்திரெண்டாயிரத்து எழுநூற்று தொன்னூற்றிரண்டு அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.
அத்தோடு பல்வேறு பட்ட சமூக நலப் பணிகள் கிளிநொச்சி பிரதேச வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கான இரத்ததானம் வழங்கும் செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலை மற்றும்
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள சுதந்திரபுரம் பகுதியிலும்
அம்பகாமம்; பகுதியிலும்; துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening