மகனின் கண்ணை துளைத்த செல்! புழுக்கள் மொய்க்க ஏற்பட்ட அவலநிலை - தந்தையின் ஆதங்கம் (Video)
யுத்தமும், யுத்தத்தால் ஏற்பட்ட இழப்புக்களும் அதன் வலிகளும் பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்வில் வடுக்களாக இன்றும் இருக்கிறது என்பதற்கு அப்பால் அவர்களது இன்றைய வாழ்வும் பெரும் துயர் மிகுந்ததாகவே காணப்படுகிறது.
யுத்தத்தில் சொத்துக்களையும், பொருட்களையும், காணிகளையும் இழந்தவர்கள் மத்தியில் தம் பெரும் சொத்துக்களான தமது பிள்ளைகளை இழந்த பலர் இன்றும் கண்ணீர் கடலிலேயே இருக்கின்றனர்.
அப்படியொரு குடும்பத்தின் வலி மிகுந்த பதிவு தான் இது. கிளிநொச்சி - பூநகரியில் இருந்து 1990களில் இடம்பெயர்ந்து 2009 இறுதி யுத்தம் வரையான 19 வருடங்கள் தொடர்ந்து இடப்பெயர்வுகளோடும், இறுதி யுத்தத்தில் இரண்டு பேர் மாவீரர்களாகவும், ஒருவர் காணாமல் ஆக்கப்பட்ட நிலையிலும் அவர்களது இழப்புக்களில் இருந்து விடுபட முடியாது தவித்து வரும் தாய் தந்தையை தேடி இவ்வாரம் லங்காசிறியின் பயணம் அமைந்திருந்தது.
தந்தை இரத்தினம் துரைராஜா (வயது 71), தீராத நோயினால் பாதிக்கப்பட்ட அவரது மனைவி மற்றும் இவர்களது பாராமரிப்பில் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் ஒரு பிள்ளையுடன் வாழ்ந்து வரும் இவர்களது மகள் என்ற ஒரு குடும்பமே இன்றும் நிலைகுலைந்து போயுள்ளது.
இது தொடர்பான விரிவான தொகுப்புடன் வருகிறது மக்கள் குரல் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |