கிளிநொச்சி தொடர்பில் விடுதலைப் புலிகளுடன் பேசிய முக்கிய நிறுவனம்! கெளதாரிமுனை ஊடாக இரகசிய நகர்வு (Video)
கௌதாரிமுனையில் வல்லரசு நாடுகள் நிலைகொள்வதால் இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என பிரித்தானியாவிலிருக்க கூடிய அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், கௌதாரிமுனை பகுதியில் கடல்வள அபிவிருத்தி என்ற அடிப்படையில் இறால் பண்ணைகளும், கடலட்டை பண்ணைகளும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கௌதாரிமுனையை நோக்கி ஒரு ஆழ்கடல் பகுதி இருக்கிறது.
கௌதாரிமுனையை அண்டி பெரும் கப்பல்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதாவது நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடைப்பட்ட கடற்பரப்பு மிக ஆழமானது.
அதிலிருந்து இங்கே வரலாம். இங்கே ஒரு கடற்படை தளம் அமைப்பதற்கான முயற்சிகளின் முன்னோடிகள் தான் இங்கே நடக்கின்றன. அத்துடன் கௌதாரிமுனை இந்தியாவிற்கு மிக அண்மித்த பகுதி.
இந்தியாவிற்கான விரைவான போக்குவரத்திற்கான ஒரு பகுதியாக இந்த இடம் இருந்திருக்கிறது. எல்லா வல்லரசுகளும் இந்த பகுதியிலே நிலை கொள்வதன் மூலம் இந்தியாவிற்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும். இந்தியாவை உளவு பார்ப்பதற்கான நடவடிக்கையாகவும் இது அமையக்கூடும் என கூறியுள்ளார்.
அத்துடன் கிளிநொச்சி தொடர்பில் விடுதலைப் புலிகளுடன் பேசிய முக்கிய நிறுவனம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 36 விநாடிகள் முன்

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
