கிளிநொச்சி இரணைமடுக்குள ஆலோசனைக் கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழான சிறுபோகத்திற்கான ஆலோசனைக் கூட்டங்கள் பிரதேச மட்டங்களில் விவசாயிகளின் பங்குபற்றுதலுடன் நடத்தப்படாமல் மூடிய அறைக்குள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் 36 அடி நீர்க் கொள்ளளவைக் கொண்ட பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக்குளத்தின் கீழ் 21,000 ஏக்கர் நிலப்பரப்பில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனாளர்களாக இருந்து வந்துள்ளனர்.
ஆலோசனைக் கூட்டங்கள்
2024ஆம் ஆண்டுக்கான சிறுபோக பயிர்செய்கை கூட்டங்களை உரிய காலத்திற்கு நடத்தாது இழுத்தடிக்கப்பட்டு வந்துள்ளதுடன் பிரதேச மட்டங்களில் விவசாயிகளை கூட்டி ஆலோசனைக் கூட்டங்கள் எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை
இந்த நிலையில் இன்று மூடிய அறைக்குள் கூட்டத்தை நடத்தி தீர்மானங்களை நிறைவேற்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் கூட்டத்திற்கான கடிதமும் 21ஆம் திகதி எனக்குறிப்பிட்டு 20ஆம் திகதி அனுப்பியுள்ளனர்.


ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri
