கிளிநொச்சியில் சர்ச்சையை ஏற்படுத்திய மரண சடங்கு
கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்த இளைஞரின் இறுதிச் சடங்கில் 50இற்கும் மேற்பட்டோர் சுகாதார நடைமுறையின்றி பங்கு கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் தொற்று அச்சம் காரணமாக இறுதிச் சடங்கில் பங்கு கொள்ள 15 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதார வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் வீதி விபத்தில் பலியான இளைஞரொருவரின் இறுதிச்சடங்கில் 50இற்கும் மேற்பட்ட கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை பணியாளர்கள் கலந்து கொண்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கோவிட் தொற்று அதிகரிக்க ஆடைத்தொழிற்சாலையும் ஒரு காரணமாக அமைந்துள்ள நிலையில் இவ்வாறான சுகாதார விதிமுறைகளை மீறிய செயற்பாடு கண்டிக்கத்தக்கது என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதன் காரணமாக பொதுமக்கள் பலர் விசனம் வெளியிட்டுள்ளதுடன் இந்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை சிலர் சமூக இடைவெளியை பின்பற்றாதும் முகக்கவசங்கள் இன்றியும் காணப்பட்டதாகவும் தெரியவருகிறது.
நாட்டில் சுகாதார விதிமுறைகளை மீறினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் சுகாதாரத்துறையினர் இந்த இறுதிச் சடங்கு விடயத்தை கண்டுகொள்ளாதது ஏன் எனவும் கேள்வியெழுப்பியுள்ளதாக தெரியவருகிறது.