கரைச்சியில் புதிதாக அமைக்கப்பட்ட கடைத்தொகுதி: கிளிநொச்சி மேல் நீதிமன்றம் உத்தரவு
கரைச்சி பிரதேச சபையினால் புதிதாக கட்டப்பட்ட கடைகளுக்கு கோரப்பட்ட விலைமனுக்கோரலை இடை நிறுத்தி வைக்குமாறு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் வர்த்தகர்கள் சார்பாக எழுத்தானை மனுவை தாக்கல் செய்த போதே எழுத்தானை மனுவை பரீசிலித்த நீதவான் குறித்த விலை மனுக்கோரலை இடைநிறுத்துமாறு உத்தரவிட்டார்.
கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கடந்த 11ம் திகதி முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமது கடைகளை மூடி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தகரக் கொட்டகை
அவர்களின் கோரிக்கைகளில் ஒன்றாக காணப்பட்ட நீண்டகாலமாக தற்காலிகமாக தகரக் கொட்டகைகளில் வர்த்தகத்தில் ஈடுபடும் புடைவை, அழகுசாதன மற்றும் ஏனைய வாணிப வர்த்தகர்களுக்கு நிரந்தரக் கட்டடத்தை கட்டி வழங்குவதாக பலதரப்பினராலும் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் இதுவரை காலமும் அவை நிறைவேற்றப்படவில்லை.
தற்போது உலக வங்கியின் அனுசரணையில் 40மில்லியன் நிதியில் மேற்படி வர்த்தகர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கரைச்சி பிரதேச சபையால் திட்டமிடப்பட்டு 08 கடைகள் அமைக்கப் பெற்று தற்போது வர்த்தகர்களுக்கு எதுவித பயனும் இன்றி கேள்வி கோரல் மூலம் (டென்டர்) கடைகளை வழங்க பத்திரிகையில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளமையானது வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மீறும் செயலாகும் என தெரிவித்திருந்தனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 30 நிமிடங்கள் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
