வடமராட்சியில் நீரில் மூழ்கி கிளிநொச்சி யுவதி மரணம்
யாழ்ப்பாணம் - வடமராட்சி, கற்கோவளம் பகுதியில் நீர்த்தேக்கத்தில் நீராடச்சென்ற 18 வயது யுவதி ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகியுள்ளார்.
இன்று இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சியை சேர்ந்த குறித்த யுவதி கற்கோவளம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் நான்கு நண்பர்களுடன் கடற்கரைக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கத்திற்கு நீராட சென்றுள்ளார்.
பருத்தித்துறை பொலிஸார் தீவிர விசாரணை
இதன்போது நீரில் மூழ்கிய நிலையில் அதனை அவதானித்த நண்பர்கள் சத்தமிட்டு அருகிலுள்ள இராணுவத்தினர் யுவதியை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் குறித்த யுவதி மரணமடைந்துள்ளார்.
குறித்த யுவதியின் மரணம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை
மேற்கொண்டு வருவதுடன், சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்
பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam
