கிளிநொச்சி விவசாயிகள் போராட்டம்(Video)
நெல்லுக்கான விலையை உரிய நேரத்தில் அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என தெரிவித்து, கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளால் இன்றைய தினம்(28.06.2023) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று காலை கரடிபோக்கு சந்தியில் ஆரம்பமானது.
கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மனு கையளிப்பு
நெல் சந்தைப்படுத்தல் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பித்து கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்றடைந்து.
நெல்லுக்கான நிர்ணய விலையை பெற்றுத்தருமாறும் தமது நெல்லை கொள்வனவு செய்யுமாறும் கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது 48 தொடக்கம் 50 ரூபாய்கே நெல் கொள்வனவு நடைபெறுவதாகவும்,
தமக்கு அறுவடை முடிவில் செலவீனமே 85 ரூபாய் முடிவடைவதாகவும் விவசாயிகள்
தெரிவித்துள்ளனர்.
நெல் சந்தைப்படுத்தல் சபையினர் அவர்களின் களஞ்சியசாலைகள் அனைத்துமே வெறுமனே
காணப்படுவதாகவும், இருப்பினும் நெல் கொள்வனவு உரிய காலத்தில் உரிய விலையில்
கொள்வனவு செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.ஶ்ரீமோகனிடமும், நடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடமும் தமது கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினை கையளித்துள்ளனர்.
மேலதிக தகவல்-எரிமலை











கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam
