கிளிநொச்சி மாவட்டத்தின் வறுமை நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது - ரூபவதி கேதீஸ்வரன்
கிளிநொச்சி மாவட்டமானது வறுமையில் இருந்து முன்னேறி வருகின்ற ஒரு மாவட்டமாக காணப்படுகின்றது என்று கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட பெண்கள் தேசிய நிலையத்தில் தையல் நிலையத் திறப்பு விழாவும், பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வு நேற்று(02-11-2023) நடைபெற்றது.
இதில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வறுமை நிலை
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,கிளிநொச்சி மாவட்டமானது வறுமையிலே முதல் நிலையான மாவட்டமாக காணப்பட்டது.
தற்போது 2019 ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் கணக்கெடுப்பின்படி வறுமையில் இரண்டாவது மாவட்டமாக காணப்படுகின்றது.
சிறு தொழில் முயற்சியாளர்களின் தொழில் முயற்சிகள் மற்றும் நடுத்தர தொழில்களின் மூலம் இந்த வறுமை நிலை குறைந்திருக்கின்றது என தெரிவித்துள்ளார்.
மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் செயற்படுகின்ற இலங்கை பெண்கள் பணியகமானது பெண் தலைமை தாங்கும் மற்றும் கணவனை இழந்த பெண்களை மேம்படுத்தலுக்கான செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் துறைசார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி மாவட்ட பெண்கள் தேசிய நிலைய உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

புலம்பெயர் நாடுகளில் இருந்து வருபவர்கள் கொழும்பில் நாட்களை செலவிட வேண்டாம்! பகிரங்க கோரிக்கை (Video)





உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam
