கிளிநொச்சி அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலை.. ஜனாதிபதி மேற்கொண்ட தொலைபேசி அழைப்பு
கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொலைபேசி மூலம் விசாரித்தார் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
மேலும், அங்கு இடம்பெற்ற உண்மை நிலையைத் தான் அவருக்கு விளக்கமளித்ததாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று காலை எனக்குத் தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்திப் பேசினார்.
ஏற்பட்ட சலசலப்பு
கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட சலசலப்பு காரணமாக அந்தக் கூட்டம் பாதியிலேயே இடைநிறுத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பேசுபொருளாக மாறியது. குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நான் தாக்க முயன்றதாக வதந்திகள் பரப்பப்பட்டன.
ஆனால், நான் அவ்வாறான ஒரு நபர் அல்லன். யாருடனும் சண்டை போடுவதோ அல்லது மோதல்களில் ஈடுபடுவதோ எனது குணம் கிடையாது.
நேற்று நடைபெற்ற இந்தச் சம்பவம் ஜனாதிபதிக்கும் வியப்பை ஏற்படுத்தியிருந்தது. எனினும், அங்கு நடந்த உண்மையான நிலைமைகளைத் தொலைபேசி வாயிலாக ஜனாதிபதிக்கு நான் தெளிவுபடுத்தினேன்" என்றார்.
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri