கண்டாவளை பிரதேசத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த ஐவருக்கு கோவிட் தொற்று உறுதி
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேசத்தில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை வெளியாகிய பரிசோதனை முடிவுகளில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காடு
கிராமத்தினைச் சேர்ந்த மாணவி ஒருவர் வெளிமாவட்டம் ஒன்றின் பல்கலைக்கழகத்தில்
பயின்று வருகின்றார்.
பல்கலைக்கழகங்கள் மூடப்பட்ட நிலையில் வீடு திரும்பிய அவர் வீட்டிலேயே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்.
அவருடன் சேர்த்து வீட்டாருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று காலை வெளியாகியுள்ளன.
குறித்த முடிவுகளின் அடிப்படையில் அந்தக் குடும்பத்தினைச் சேர்ந்த ஐந்து பேர்
தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கிளிநொச்சி சுகாதாரத் திணைக்கள
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 17 மணி நேரம் முன்

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam

போட்டோஸ் ஓவர், திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட தொகுப்பாளினி பிரியங்கா.. இதோ Cineulagam
