கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
கிளிநொச்சி மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டமானது, இன்று(04.09.2026) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் நிர்வாக முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
இதன்போது, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்காக முன்வைக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பிலும், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கௌதாரிமுனைப் பகுதியில் சுற்றுலா அபிவிருத்திக்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 300 ஏக்கர் காணியில், முதல் கட்டமாக 113 ஏக்கர் முதலீட்டாளர்களுக்கு வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளன.
இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்தில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், எல்லை நிர்ணயம் தொடர்பில், சில கிராம அலுவலர் பிரிவுகளை இணைப்பதற்கு எல்லை நிர்ணய ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரைகள் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவில் நிராகரிக்கப்பட்டமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிலும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்தையே கருத்திற்கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டது.
கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் வருடாந்த அபிவிருத்திப் பணிகளுக்கும், கிராமிய வீதிகள் அபிவிருத்தித் திட்டங்கள் மூன்றிற்கும் அனுமதி வழங்கப்பட்டது. போக்குவரத்து அமைச்ச விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ள இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் கீழ், கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து பரந்தன் சந்தி வரையிலான ஏ–9 வீதியில் கண்காணிப்புக் கமராக்களைப் பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு முன்மொழிவுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
மேலும், கல்மடுவில் அமைந்துள்ள சேரன் அரிசி ஆலையை முழுத் திறனுடன் இயக்குவதற்கு பொருத்தமான முதலீட்டாளரிடம் ஒப்படைப்பது தொடர்பிலும், கிளிநொச்சியைச் சேர்ந்த முதலீட்டாளர் ஒருவரால் உணவு உற்பத்தித் தொழிற்சாலை அமைப்பதற்காகக் கோரப்பட்டுள்ள காணியை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும், அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening