விசமிகளால் குறிவைக்கப்படும் கண்டாவளை கமநல சேவை நிலையம்(Video)
கிளிநொச்சி கண்டாவளை கமநல சேவை நிலையத்தில் உள்ள சில பொருட்களுக்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.
கண்டாவளை கமநல சேவை நிலையத்தில் நேற்றைய தினம் அலுவலக கடமைகள் முடித்து அலுவலகம் பூட்டப்பட்ட பின்னர் அங்கிருந்த கதிரை மற்றும் ஆவணங்கள் சிலவற்றிற்கும் விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடு
அலுவலகத்தில் தீ எரிவது தொடர்பில் அவதானித்த கடமைக்கு வந்த காவலாளி சம்பவம் தொடர்பில் உரிய அதிகாரிக்கு தகவல் வழங்கியதை அடுத்து உடனடியாக தீ அணைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஏற்கனவே குறித்த கமநல சேவை நிலையத்தின் பெயர்கலகை சேதமாக்கப்பட்டுள்ளதுடன் நேற்று முன்தினம் கற்கள் மற்றும் வெற்றுப் போர்த்தல்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 30 நிமிடங்கள் முன்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
